க.பொ.த உயர்தரத்தில் காணப்படுகின்ற பாடத்துறைகளுக்கான பாடச் சேர்மானம் தொடர்பில் தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கை இலக்கம் 2016/13 “க.பொ.த (உயர் தர)பாடச் சேர்மானங்களும் பல்கலைக்கழகப் பிரவேசம் தொடர்பான பாடச் சேர்மானங்களும்” என்ற சுற்றறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியீடு செய்யப்படுகின்ற பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல்(First Form) அடிப்படையில் ஒர் மாணவன் தனது உயர்தரத்திற்கான பாடத்தெரிவினை மேற்கொள்ள முடியும். எனினும் பாடசாலைகளில் காணப்படுகின்ற பாட துறை சார் ஆசிரியர் வளம், மற்றும் நேரசூசிகை தயாரிப்பதில் உள்ள நடைமுறை சார் பிரச்சினைகள் போன்ற காரணங்களாலும் மாணவர்களின் விருப்பத்திற்கமைய பாடத்தெரிவினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
கலைத்துறையில் ஒர் பாடமாக தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தினை ஒர் பாடமாக தெரிவு செய்ய முடியுமா?
ஆம்
சுற்றறிக்கை 2016/13 அமைவாக கலைப் பிரிவில் ‘ஒர் மாணவர் சமூக விஞ்ஞான பாட வகுதிக்குள் இருந்து குறைந்தது ஒர் பாடத்தினையாவது தெரிவு செய்தல் வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ் சமூக விஞ்ஞான பாட வகுதியில் காணப்படும் 11 பாடங்களில் 11 ஆவது பாடமாக தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடம் காணப்படுகின்றது. அவ் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தினை ஒர் பாடமாகவும் ஏனைய இரு பாடங்களை கலைப்பிரிவில் விரும்பியவாறும் ஒர் மாணவனால் தெரிவு செய்ய முடியும்.
கலைப்பிரிவில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தினை தெரிவு செய்வதால் பல்கலைக் கழக தெரிவில் மாணவன் பெறும் அனுகூலம் என்ன?
ஏனைய வழமையான கலைப் பிரிவு பாடத் தெரிவு பாடங்களின் பெறுபேற்றுக்கான இசற் புள்ளிகளை விட அதிகமான இசற் புள்ளிகளை பெற்று பல்கலைக்கழக நுழைவை உறுதி செய்ய முடியும். மேலும் மாணவன் விரும்பும் பட்சத்தில் கலைப் பிரிவு மாணவர்களுக்கு என விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கலை தகவல் தொழினுடப்ப பாட நெறியினை கற்று நான்கு வருடங்களில் BA.Hons(IT) பட்டத்தினை தனதாக்கிக் கொள்ளவதுடன் இலகுவாக தனது தொழில் வாய்வுக்களையும் பெறமுடியும். எனினும் இவ் பாடநெறிக்கு சாதாரண தரத்தில் கணிதபாடத்தில் திறமைச் சித்தி கட்டாயமானதாகும்.
வணிகப்பிரில் இருந்து தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தினை ஒர் பாடமாக தெரிவு செய்ய முடியுமா?
ஆம்,
------ அடுத்த அத்தியாயத்தில் -----
